நம்பியூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நம்பியூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நம்பியூர்
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நர்சுகள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்த போலீசாரை கண்டித்தும், நர்சுகளுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்திட வலியுறுத்தியும் நம்பியூர் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார்.