நாகையில், பலத்த காற்றுடன் மழை

நாகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2022-08-27 17:17 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பலத்த காற்றுடன் மழை

நாகையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த ்நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் ெபருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி நின்றது.

2 மணி நேரம் மின்தடை

பலத்த காற்றுடன் மழையால் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.இதேபோல் நாகூர், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, பரவை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்று மழை பெய்தது.

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்