நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியரே முடிவு எடுக்கலாம் - மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு

உள்ளூர் வானிலை நிலவரம், மழைச்சூழலை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-11-22 03:21 GMT

நாகை,

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக, இன்று (22-11-2023) முதல் நாளை மறுதினம் (24-11-2023) வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

உள்ளூர் வானிலை நிலவரம், மழைச்சூழலை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்