நாகையில், பல்வேறு விளையாட்டு போட்டிகள்
இன்று நடக்கிறது: நாகையில், பல்வேறு விளையாட்டு போட்டிகள்;
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள், 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக ஆடவர் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. 19 மற்றும் 25 வயதிற்குட்பட்ட ஆடவர் மற்றும் பெண்களுக்கு வாலிபால் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், 45 வயதிற்குட்பட்ட ஆடவர் மற்றும் பெண்களுக்கு 1 கிலோ மீட்டர் நடைபோட்டி, 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், சதுரங்கம் மற்றும் கேரம் ஆகிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. எனவே, மேற்படி விளையாட்டு போட்டிகளில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.