முத்தையாபுரத்தில் உறவினர்கள் 3 பேரை தாக்கியவர் கைது

முத்தையாபுரத்தில் உறவினர்கள் 3 பேரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-09 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி கதிஜான் (வயது 42). இவருடைய தங்கை மகள் தஸ்மிகா. இவருக்கும், அவரது கணவர் மூசாஅகமது காசிம் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கோபித்து கொண்டு கதிஜான் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மூசா அகமது காசிம் அங்கு வந்து, அவரது மனைவியின் முடியை பிடித்து இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதை கதிஜான், உறவினர் பரக்கத்து நிஷா, இபுராகிம் ஆகியோர் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூசா அகமது காசிம் அவர்களையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இபுராகிம், கதிஜான், பரக்கத்து நிஷா ஆகிய 3 பேரும். சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மூசா அகமது காசிமை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்