முத்தையாபுரத்தில்மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

முத்தையாபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-23 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு இந்திரா நகரை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மகன் ராதாகிருஷ்ணன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவருடன் வேலை பார்க்கும் பாலமுருகன் என்பவரும், முத்தையாபுரம் பஜாரில் உள்ள பாருக்கு மது குடிக்க சென்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளை பாருக்கு வெளியே நிறுத்தி விட்டு சென்றனர். மது அருந்திய பின்பு வெளியே வந்த அவர்கள், அங்கு நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், முத்தையாபுரம் குமாரசாமிநகர் குஞ்சரவேல் மகன் உமையார் தங்கம் (24) மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை மீட்டனர். கைதான உமையார் தங்கம். மீது முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்