முத்தையாபுரத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
முத்தையாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.;
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் 53-வது வார்டு தோப்பு தெரு, முஸ்லிம் தெரு, வரத விநாயகர் கோவில் தெரு, முனியசாமி கோவில் தெரு, வடக்கு தெரு பெரியார் நகர் உள்ளிட்ட பகுதியில் தரமான சாலை வசதி அமைக்க கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, புறநகர் செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.