முத்தையாபுரத்தில்ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
முத்தையாபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
ஸ்பிக்நகர்:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பஜாரில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டச்செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். எம்ஜிஆர் அணி செயலாளர் வீரபாகு, பகுதி செயலாளர் முருகன் ஜெய் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கலந்துகொண்டு பேசினார்.
இக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, தலைமைக் கழக பேச்சாளர் நைனா முகமது ஞான தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.