மேகமலை வனப்பகுதியில்குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை

மேகமலை வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடு்த்தனர்.

Update: 2023-08-18 18:45 GMT

கடமலை-மயிலை ஒன்றியம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் மான்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். மான்களின் குடிநீர் தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் சில இடங்களில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டது. பின்னர் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் தற்போது குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பயன்பாடு இன்றி உள்ளது. மேலும் மழை இல்லாமல் வனப்பகுதியில் உள்ள சிறு, சிறு ஓடைகள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் மான்கள் குடிநீருக்காக வேறு பகுதிகளுக்கு இடம்பெறும் நிலை உள்ளது. எனவே அதனை தடுக்கும் வகையில் வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மழை பொழிவு குறைந்து வருவதால் கூடுதலாக புதிய குடிநீர் தொட்டிகளை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்