1330 திருக்குறளுக்கு ஏற்ப நடனமாடி சாதனை படைத்த பரதநாட்டிய கலைஞர்கள்

மயிலாடுதுறையில் 1330 திருக்குறளுக்கும் 2½ வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப நடனமாடி சாதனை படைத்தனர்.

Update: 2022-08-07 16:05 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் பரதநாட்டியத்தில் உலக சாதனை முயற்சியாக 1330 திருக்குறளுக்கும் 12 மணி நேரம் நாட்டியமாடும் நடனத் திருவிழா நடந்தது. தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.

இன்று காலை தொடங்கி இரவு வரை நடந்த இந்த நடன திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த 50 கலைஞர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 1330 திருக்குறளுக்கும் 2½ வயது முதல் 42 வயது வரையிலான கலைஞர்கள் ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப நடனமாடினர்.

இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த நாட்டிய திருவிழா மாலை 6:30 மணி வரை 12 மணி நேரம் நடந்தது. இந்த சாதனை முயற்சியை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு பதிவு செய்தது. தொடர்ந்து இரவு பரிசளிப்பு விழா நடந்தது.

இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு நடன கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் நகரசபை தலைவர் செல்வராஜ் மற்றும் வணிகர் சங்க பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்