குரூப்-3 பணி தேர்வை மதுரையில் 55 சதவீதம் பேர் எழுதவில்லை

குரூப்-3 பணி போட்டித்தேர்வை மதுரையில் 55 சதவீதம் பேர் எழுதவில்லை.

Update: 2023-01-28 20:56 GMT


குரூப்-3 பணி போட்டித்தேர்வை மதுரையில் 55 சதவீதம் பேர் எழுதவில்லை.

போட்டித்தேர்வு

குரூப்-3 பதவிகளில் வரும் கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கத்தின் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களில் 14 இடங்களுக்கும், தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் ஸ்டோர் கீப்பர் பணியிடத்தில் ஒரு இடத்துக்கும் என மொத்தம் 15 இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது.

இந்த தேர்வை எழுதுவதற்கு 98 ஆயிரத்து 807 பேர் விண்ணப்பித்தனர். அதாவது, ஒரு பணியிடத்துக்கு 6 ஆயிரத்து 587 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்வு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 335 இடங்களில் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 37 இடங்களில் 10,841 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

55.5 சதவீதம் பேர் வரவில்லை

தமிழ்நாடு முழுவதும். 98 ஆயிரத்து 807 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் மதுரை மாவட்டத்தில் 14 ஆயிரத்து 330 பேர் விண்ணப்பித்து இருந்ததில், 6384 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினார்கள். அதாவது, 7946 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 55.5 சதவீதம் ஆகும். இந்த தேர்வுக்காக மதுரை மாவட்டத்தில் 46 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்