எம்.சவேரியார்புரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் பதிவு முகாம்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

எம்.சவேரியார்புரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் பதிவு முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-27 18:45 GMT

அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் ஊழியர்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு, அதனை பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடி அருகே உள்ள எம். சவேரியார்புரத்தில் நடைபெற்ற முகாமை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செல்வகுமார், ஸ்பிக்நகர் பகுதி இளைஞரணி தங்கராஜ், பகுதி செயலாளர் ஆஸ்கர், வட்டச் செயலாளர்கள் வசந்தி பால்பாண்டியன், மைக்கேல்ராஜ், அவைத்தலைவர் கிருபானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி

இதேபோன்று, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவு முகாம் உடன்குடி பேரூராட்சி மண்டபம், பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கலையரங்கம் ஆகியவற்றில் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஊராட்சி தலைவி பிரம்மசக்தி, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் க.இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்