கடத்தூர் அருகேநிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

கடத்தூர் அருகே நிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2023-09-07 19:00 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள நொச்சிக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது 68). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நரசிம்மன் (55) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பொதுவாக இருந்த வீட்டுமனை நிலத்தில் நரசிம்மன் மகன் முத்து என்பவர் விவசாயம் செய்ய சுத்தம் செய்ததாக தெரிகிறது. பொது நிலத்தை எதற்காக சுத்தம் செய்கிறாய் என நஞ்சப்பன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்து, கார்த்திக் (30) மற்றும் நரசிம்மன் ஆகிய 3 பேரும் சேர்ந்து நஞ்சப்பனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நஞ்சப்பன் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து நரசிம்மன், கார்த்திக், முத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்