குளத்தூரில்இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நூற்றாண்டு விழா

குளத்தூரில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-10-17 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக பள்ளி நூற்றாண்டு விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியை மரிய ராஜ செல்வி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சரளா, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள சுனாமி நகர் தூய ஆரோக்கிய அன்னை திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடந்தது. கபடி போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்