குலசேகரன்பட்டினத்தில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

குலசேகரன்பட்டினத்தில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-11 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அண்ணாசிலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (வயது 24). சென்னை மேடவாக்கத்தில் பழைய பேப்பர் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 7-ந்தேதி ராஜேஷ் குலசகேரன்பட்டினம் வந்துள்ளார். நேற்றுமுன்தினம் பாட்டி வீட்டிற்கு சென்று, அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு வீட்டுக்கு சென்றாராம். இந்த நிலையில் அவர் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். இதை பார்த்து பதறிப்போன உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ராஜேஷ் பிணமாக தொங்கியுள்ளார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர்அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்