குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரத வீதி உலா
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரத வீதி உலா நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை மாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதம் ரதவீதியுலா நடந்தது. கோவிலை சுற்றி வலம் வந்த முத்தாரம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.