கூடலூர் நகராட்சி பகுதியில் தார் சாலை அமைப்பது குறித்து ஆய்வு

கூடலூர் நகராட்சி பகுதியில் தார் சாலை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

Update: 2022-10-01 16:29 GMT

கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு உள்ள பெரிய தெருக்களில் தார் சாலையும், குறுகிய தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் மூலம் சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நகரின் விரிவாக்க பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதியுடன், மண் சாலைகளை தார்சாலையாக மாற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து 10-வது வார்டு ஓம்சக்திநகர் பகுதிகளில் மண் சாலையை அகற்றி தார்சாலையாக மாற்றுவது குறித்து நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் லோகந்துரை, சித்ரா, கலாமணி ஆகியோர் உடன் இருந்தனர். விரைவில் மண் சாலையை அகற்றி தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்