கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை
கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, விஜயாபுரி, எப்போதும் வென்றான், எம். துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி உப மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருக்கிறது. எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் நகரங்கள், மற்றும் கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.