கோவில்பட்டயில் மாணவி மாயம்
கோவில்பட்டயில் மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பாரதி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் துரை. இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 13). இவர் இங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.