கோவில்பட்டியில் ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம்

கோவில்பட்டியில் ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடக்கிறது.

Update: 2022-12-01 18:45 GMT

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் ஜி.எஸ்.டி. குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. கருத்தரங்குக்கு தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டி.மனோதங்கராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். கருத்தரங்கில் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன மண்டல கவுன்சில் உறுப்பினர்கள் ராஜே ஷ், ரேகா உமாஷிவ், ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். பிரசன்ன கிருஷ்ணன், மணிமாறன் ஆகியோர் ஜி.எஸ்.டி. தணிக்கை, கண்காணிப்பு, ஆய்வு, ஆண்டு கணக்கு சமர்ப்பிப்பு குறித்து விளக்கி கூறுகின்றனர். நிகழ்ச்சியில் பட்டய கணக்காளர்கள், தொழில்முனைவோர்கள், கணக்கர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்