கோவில்பட்டியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டி:
கோவில்பட்டி யூபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தீயணைப்பு படை அலுவலகம் முன்பு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில், பள்ளி தலைவர் மா. பரமசிவம், உறுப்பினர்கள் அங்கு முத்து, சோலையப்பன், அசோக் குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்முருகன் ஆகியோர்முன்னிலையில் நகர சபை தலைவர் கா. கருணாநிதி கொடியை அசைத்து ேபரணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அமுதவல்லி, தீயணைப்பு படை அலுவலர் சுந்தர்ராஜ், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சொக்கலிங்கம், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியில் மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டு மெயின் ரோடு வழியாக ரெயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.