கோவில்பட்டியில் ரூ.1.83 கோடியில் அரசு மகளிர் பள்ளி புதுப்பிக்கும் பணி தொடக்கம்
கோவில்பட்டியில் ரூ.1.83 கோடியில் அரசு மகளிர் பள்ளி புதுப்பிக்கும் பணி தொடங்கியது
கோவில்பட்டி( கிழக்கு):
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் தகைசால் திட்டத்தின் கீழ் தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் ரூ.1.83 கோடி மதிப்பில் கட்டிடம் புதுப்பித்தல் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது,
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக காவல் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் கட்டிட புதுப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார். இதில் உதவி செயற்பொறியாளர் குமரேசன், இளநிலை பொறியாளர் காட்வின், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன், உடற்கல்வி இயக்குனர் காளிராஜ் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். தொடர்ந்து பள்ளி வகுப்பறைகள், ஆய்வுக்கூட கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும்.