கோவில்பட்டியில் கால்பந்து போட்டி பரிசளிப்புவிழா

கோவில்பட்டியில் கால்பந்து போட்டி பரிசளிப்புவிழா நடந்தது.

Update: 2022-11-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை ஏற்பாட்டில் அ.தி.மு.க. ஆண்டுவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி வ. உ. சி. அரசு மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், நாடார் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் வ. உ. சி. பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3-வது இடத்தை காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், 4-வு இடத்தை லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளி அணியும் பிடித்தன.

இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நகரச் செயலாளர் எஸ். விஜய பாண்டியன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முன்னிலை வகித்தார். கால்பந்து கழக செயலாளர் தேன் ராஜா வரவேற்றுப் பேசினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வ.உ.சி மேல் நிலைப் பள்ளிக்கு பரிசு கோப்பையை வழங்கினார். மற்ற வெற்றிபெற்ற அணிகளுக்கும் அவர் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் எஸ். பழனிச்சாமி, பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நீலகண்டன், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். நகர பேரவை பொருளாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்