கோவில்பட்டியில்தே.மு.தி.க. வினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் தே.மு.தி.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-21 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்க உள்ள இலவச வீட்டு திட்டத்தில் தங்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் வீடு அல்லதுவீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொது குழு உறுப்பினர் சாமி மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்