கோவில்பட்டியில்வட்டார குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம்
கோவில்பட்டியில் வட்டார குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்ட அரங்கில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஜெயந்தி வரவேற்று பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் குழந்தைகள் பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாத கிராமங் களுக்கு பஸ் வசதி ஏற்படுத்திடவும், பள்ளிகள் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் போலீசார் மூலம் கண்காணிக்கவும் விவாதிக்கப்பட்டது.
இதில் வட்டார கல்வி அலுவலர் பாக்கியலட்சுமி, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ராணிவிஜயா, தன்னார்வலர் தமிழ்ச்செல்வி, வட்டார மகளிர் திட்ட மேலாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.