கோவில்பட்டியில் தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-12-13 18:45 GMT

கோவில்பட்டி:

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன் ஏற்பாட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்