கோவில்பட்டியில் ரெயில் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது
கோவில்பட்டியில் ரெயில் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி (கிழக்கு):
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் சார்பில் ரெயில் மறியலில் ஈடுபட நேற்று காலையில் ஆதித்தமிழர் கட்சியினர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலர் நம்பிராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் தெற்கு மாவட்ட செயலர் ஊர்காவலன், மாவட்டத் துணைத் தலைவர் முத்துராஜ், துணைச் செயலர் முத்துசாமி, கயத்தாறு ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜ், முருகன், சங்கர் உள்பட பலர் ரெயில் நிலையம் நோக்கி மறியலில் ஈடுபட வந்தனர். கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 11 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.