கோத்தகிரியில் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு
கோத்தகிரியில் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.
கோத்தகிரி: கோத்தகிரி அருகே கொட்டகம்பை பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். விவசாயியான, இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் மேய்ந்துக்கொண்டிருந்த போது அங்கிருந்த 20 அடி ஆழ பள்ளத்தில் திடீரென தவறி விழுந்து வெளியே வரமுடியாமல் பரிதவித்தது.
இதையறிந்த விவசாயி சிங்கராயர், கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் பேரில் சிறப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு பசுமாட்டை, கயிற்றால் கட்டி பத்திரமாக மேலே தூக்கி கொண்டு வந்து உரிமையாளர் சிங்கராயரிடம் ஒப்படைத்தனர். இதற்கு விவசாயி சிங்கராயர், தீயணைப்பு படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.