கொடுமுடி பகுதியில்இடி-மின்னலுடன் பலத்த மழை
கொடுமுடி பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கொடுமுடி
கொடுமுடியில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. இரவு 7.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 9 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது.
இதேபோல் ஒத்தக்கடை கணபதிபாளையம், தாமரைபாளையம், சோளக்காளிபாளையம், பெரிய வட்டம், சாலைப்புதூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.