கெங்குவார்பட்டியில் குடோனில் திருட்டு

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் உள்ள திருட்டுபோனது.;

Update: 2022-10-06 16:21 GMT

தேவதானப்பட்டி அருகில் உள்ள கெங்குவார்பட்டி பஜனைமட தெருவை சேர்ந்தவர் பொன்ராம் (வயது 50). கட்டிட காண்டிராக்டர். இவர், தனது வீட்டு அருேக உள்ள குடோனில் சுமார் 500 கிலோ எடையுள்ள இரும்பு கதவு. இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார். நேற்று குடோனில் சென்று பார்த்தபோது பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதை பாா்த்து அதிர்ச்சியடைந்த அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்