கயத்தாறில்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். இதில் சத்துணவு சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட பொருளாளர் சுப்பையா, வட்டார பொருளாளர் வளர்மதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் கோவில்பட்டி வட்ட செயலாளர் பாஸ்கரன், வட்டார செயலாளர் ஆனந்தன் உள்பட சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.