கயத்தாறில் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் விழா

கயத்தாறு,கோவில்பட்டியில் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-13 18:45 GMT


கயத்தாறு:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 60-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் ஜான்ஜோன் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கட்சியினர் அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து கயத்தாறு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் கோவிலில் துணைப் பொதுச் செயலாளர் எஸ். வி. எஸ். பி. மாணிக்கராஜா தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கு 60 கிலோ கேக் வெட்டி பக்தர்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாரிமுத்துபாண்டியன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சங்கிலி பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சூரிய மிணிக்கண்துரை, நகர செயலாளர் கந்தையா பாண்டியன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, கோவில்பட்டி ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர் வி. ஜெய்சங்கர் தலைமையில் இனாம் மணியாச்சி சந்திப்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவபெருமான் கேக் வெட்டி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கே. ஈஸ்வர பாண்டியன், மாணவர் அணி செயலாளர் பி.வி.சீனிவாசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கணேஷ் பாபு, தொழிற்சங்க பேரவை செயலாளர் முத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெளிச்சம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்