காயாமொழி பகுதியில் மோடி பிறந்த நாள்விழா
காயாமொழி பகுதியில் மோடி பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காயாமொழி பஞ்சாயத்து தேரிக்குடியிருப்பு காமராஜர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் படி பா.ஜ.கவினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணகுமார், மாவட்ட செயலாளர் அர்ஜூன் பாலாஜி, கலை இலக்கிய பிரிவு மாவட்ட தலைவர் பேச்சித்துரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் தங்கரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.