காயாமொழி பகுதியில் இந்து அன்னையர் முன்னணி கூட்டு வழிபாடு
காயாமொழி பகுதியில் இந்து அன்னையர் முன்னணி கூட்டு வழிபாடு நடத்தினர்.
காயாமொழி:
இந்து அன்னையர் முன்னணி சார்பில் நாட்டின் நலனுக்காகவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் தேரி குடியிருப்பு, காயாமொழி, பிச்சிவிளைவடக்குதெரு, விஜயநாராயணபுரம், அம்மன்புரம், தைக்காவூர் ஆகிய கிராமங்களில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கேசவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவி சந்தனகனி, மாவட்ட செயலாளர்கள் ஜெயசித்ரா, சொர்ண சுந்தரி, இந்து முன்னணி காயாமொழி தலைவர் திருமால் முத்து உட்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.