காயல்பட்டினத்தில்ஊழல் தடுப்பு மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை கூட்டம்

காயல்பட்டினத்தில் ஊழல் தடுப்பு மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-21 18:45 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் ஜெய்லாணி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பேரவை தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கப்பார் முன்னிலை வகித்தார். அமைப்பு நிர்வாக செயலாளர் கல்லை சிந்தா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகரசபை கவுன்சிலர்கள் அன்வர், அபூபக்கர், சித்திக் ஆகியோருக்கு சிறந்த சேவையாளர் விருதுகள் வழங்கப்பட்டது. விருதுகளை சமூக நீதிப் பேரவை செயலாளர் அகமது சாய்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரவை நிர்வாகிகள் தியாகராஜன், கொம்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை துணை தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்