கன்னிசேர்வைபட்டி கிராமத்தில்தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக புகார்:போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை

கன்னிசேர்வைப்பட்டி கிராமத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர்.;

Update: 2023-02-21 18:45 GMT

சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டி கிராமத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக ஒரு சமுதாய மக்கள் அரசுக்கு புகார் மனு அனுப்பினர். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அந்த மனுவை அரசு அனுப்பியது. அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது.

இதற்காக கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த இருசமுதாய மக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் தனித்தனியாக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் விசாரணை நடத்தினார். இருதரப்பினரிடம் விசாரித்ததை தொடர்ந்து மேலும் விசாரணை நடத்திய பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்