காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலில்சித்திரை திருவிழா கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் அருகே காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2023-04-26 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம்வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்பட்டம் வீதி உலாவும், தொடர்ந்து சுவாமி, அம்பாள், அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நந்தியம்பெருமான், பலிபீடம் மற்றும் கொடிமரத்திற்கு பால், பழம், பன்னீர், விபூதி, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், நடத்தப்பட்டு, பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்