கம்பம் நகராட்சியில்சாலையோர வியாபாரிகள் விவரங்களை சேகரிக்கும் பணி

கம்பம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-03-20 18:45 GMT

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தள்ளுவண்டி, தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. மேலும் பிரதமரின் ஸ்வாநிதி சேசம்ரிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளின் குடும்பத்தினரை மேம்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சாலையோர வியாபாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் ஆதார், வங்கி கணக்கு, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, மத்திய அரசு திட்டங்களான பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள் காப்பீடு திட்டம்), பிரதமரின் சுரக்சா பீமா யோஜனா (விபத்து காப்பீடு திட்டம்), பிரதமரின் ஜன் தான் யோஜனா (குறைந்தபட்ச இருப்பு இன்றி வங்கி கணக்கு தொடங்கும் திட்டம்), கட்டுமான தொழிலாளர் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் உள்ளிட்ட 8 திட்டங்களில் குடும்ப உறுப்பினர்களை பயனாளிகளாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் பட்டியல் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சேகரிக்கபட்டு வருகிறது. அதன்படி கம்பம் நகராட்சியில் உள்ள தெருவோர வியாபாரிகளில் 10 ஆயிரம் சுழல் நிதி பெற்ற சுமார் 400 பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் பட்டியல் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சந்தேகம் ஏதும் இருந்தால் தீர்த்து வைக்கப்படும் என்று நகராட்சி கட்டிட ஆய்வாளர் சலீம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்