காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில்செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் தொய்வு
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 16 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய மல்லிகா என்பவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
அவர் 2 பேரூராட்சிகளையும் சேர்த்து கவனிப்பதால் இங்கு வாரத்தி்றக்கு 2 நாள் மட்டுமே வருகிறார். இதனால் பேரூராட்சியில் தெருவிளக்கு, குடிநீர் வழங்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சிக்கு தனி செயல் அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.