கச்சனாவிளையில்புதிய தார்சாலை பணிகள் ஆய்வு
கச்சனாவிளையில் புதிய தார்சாலை பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் ஆய்வு செய்தார்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கச்சனாவிளை பஞ்சாயத்து புன்னைநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்திஉமரிசங்கர் ஆய்வு செய்தார். மேலும் வனத்திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அவர் கோவில் வளாகம் பகுதியிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம் லீலா, பஞ்சாயத்து தலைவர் கிங்ஸ்டன், ஒன்றிய பொறியாளர் வெள்ளப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.