தேனியில்கஞ்சா கடத்திய வாலிபர் கைது
தேனியில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே பூதிப்புரம் பைபாஸ் சாலை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. அதை விற்பனைக்காக கடத்திச் சென்றதாக தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்டவர் போடி மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் அலெக்சாண்டர் (வயது 22) என்பதும், தப்பி ஓடியது பூதிப்புரத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் வீரா என்றும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அலெக்சாண்டரை போலீசார் கைது செய்தனர். வீராவை தேடி வருகின்றனர்.