தேனியில் ஆற்றில் மூதாட்டி பிணம் மீட்பு

தேனியில் மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்

Update: 2022-11-03 18:45 GMT

கோம்பையை சேர்ந்தவர் சீனியம்மாள் (வயது 72). கடந்த மாதம் 31-ந்தேதி இவர் கோவிலுக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிச் சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய பேரன் கார்த்திக் (26) கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனியம்மாளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தேனி அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்று பாலம் அருகில் ஒரு மூதாட்டி பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திக் அங்கு வந்து பிணத்தை பார்வையிட்டார். அப்போது காணாமல் போன தனது பாட்டி சீனியம்மாள் உடல் அது என அவர் அடையாளம் காட்டினார். ஆற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்