தேனியில் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
தேனியில் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தேனியில் ஆட்டோக்களில் மாணவ, மாணவிகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தேனி என்.ஆர்.டி. நகரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆட்டோக்களில் 12-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை சிலர் ஏற்றி வந்தனர். அதுபோன்ற அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றி வந்த 12 ஆட்டோ டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த டிரைவர்களுக்கு மொத்தம் ரூ.8 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.