தேனியில் காவி கம்பத்தில் பறந்த தேசியகொடி: இந்து முன்னணி மீது போலீசில் புகார்

தேனியில் காவி கம்பத்தில் தேசிய கொடி பறந்தது. இதுகுறித்து இந்து முன்னணி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது

Update: 2022-08-13 17:06 GMT

நாடு முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியகொடி நேற்று ஏற்றப்பட்டது. இந்நிலையில், தேனி பெரியகுளம் சாலையில் தனியார் ஸ்கேன் மையம் அருகில் இன்று இந்து முன்னணி சார்பில் காவி கம்பத்தில் தேசியகொடி ஏற்றப்பட்டது. இதை கண்டித்தும், இந்த கம்பத்தில் தேசியகொடி ஏற்றிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று புகார் கொடுக்க வந்தனர்.

இதேபோல் திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜெய்பீம் புரட்சிப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் பேரவை ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இதுதொடர்பான புகார் மனுவை போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிரிடம் கொடுத்தனர். மேலும் அந்த புகாரில், அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்