தேனியில்மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி:கலெக்டர் வழங்கினார்

தேனியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் விழா நடந்தது.;

Update: 2022-12-29 18:45 GMT

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா தேனி அல்லிநகரத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், 942 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 11 ஆயிரத்து 775 உறுப்பினர்களுக்கு ரூ.61.47 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.

மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவிலான வங்கி கடன் வழங்கிய 2 வங்கிகளுக்கு மாவட்ட அளவிலான விருது மற்றும் சான்றிதழ்கள், 6 வங்கிகளுக்கு கிளை அளவிலான வங்கியாளர் விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.மோகன் குமார், அல்லிநகரம் நகராட்சி மன்ற தலைவர் ரேணு பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்