தேனியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி பங்களாமேட்டில் பா.ஜ.க. சார்பில், மின்கட்டண உயர்வை கண்டித்தும், தமிழ் மொழியை தி.மு.க. அரசு மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, நகர தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.