தேனியில்பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தேனியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-16 18:45 GMT

தேனி புதிய பஸ் நிலையம் அருகில், சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கைலாசபட்டியை சேர்ந்த விஜயகாந்த் (வயது 41), அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்லக்கண்ணன் (36), கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுஜித்குமார் (35), ஆண்டிப்பட்டியை சேர்ந்த முரளிதரன் (37) என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.400 ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்