குருவரெட்டியூர் பகுதியில்உரிமம் புதுப்பிக்காமல் இயங்கி வந்த3 ஆட்டோக்கள், சரக்கு வாகனம் பறிமுதல்

சரக்கு வாகனம் பறிமுதல்

Update: 2023-01-28 20:28 GMT

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பர்மிட் இல்லாமலும், முறையாக அனுமதி பெறாமலும் வாகனங்கள் இயக்குவது குறித்து மோட்டார் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவின்படி பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

குருவரெட்டியூர் பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்ட போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வந்ததாக 3 ஆட்டோக்கள், ஒரு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தையும் மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா பறிமுதல் செய்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்