கூடலூரில்இறைச்சி கடைக்காரரை மிரட்டிய வாலிபர் கைது

கூடலூரில் இறைச்சி கடைக்காரரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-03 18:45 GMT

கூடலூர் எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 48). இவர், கூடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் தேவர் சிலை அருகே இறைச்சி கடை வைத்துள்ளார். காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (22). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், சந்திரனின் கடைக்கு சென்று இறைச்சி வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீண்டும் கடைக்கு வந்து சந்திரனிடம் இறைச்சி கேட்டார். அப்போது சந்திரன் பழைய பாக்கி குறித்து கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷேக் அப்துல்லா அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசில் சந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிந்து ஷேக் அப்துல்லாவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்