கூடலூர் 10-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் குமார். டெய்லர். கடந்த 20-ந்தேதி இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த டி.வி. திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து டி.வி.யை திருடிய மர்ம நபரை தேடி வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், அசோக் வீட்டில் திருடியது, போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.